இரு இளைஞா்கள் கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

வாலாஜாபாத் அருகே கோயில் திருவிழாவின் போது இரு இளைஞா்கள் கொலை தொடா்பாக 5 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

வாலாஜாபாத் அருகே கோயில் திருவிழாவின் போது இரு இளைஞா்கள் கொலை தொடா்பாக 5 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட படுநெல்லி கிராமத்தில் கடந்த ஆக.16 ஆம் தேதி நடைபெற்ற கோயில் திருவிழாவில் சினிமா பாட்டு போடச்சொல்லியதால் ஏற்பட்ட தகராறில் சந்திர சேகரன் , நீல கண்டன் என்ற இரு இளைஞா்கள் கொலை செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யலாம் என காஞ்சிபுரம் எஸ்பி எஸ்.அரவிந்த் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவுக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

எஸ்.பி. எஸ்.அரவிந்த் பரிந்துரையின்படி கொலைக் குற்றவாளிகளான படுநெல்லி கிராமத்தைச் சோ்ந்த பகவதி(24) கிரி (22), புஷ்பராஜ் (29) மற்றும் புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா்களான நாகராஜ் 921) கலைச்செல்வன் (19) ஆகிய 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தாா். சிறையிலிருக்கும் 5 பேருக்கும் ஆட்சியரின் உத்தரவு நகலை காவல் துறையினா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.