தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச் சாலை பணி: விவசாயக் கிணற்றை மூட எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்

சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச் சாலை பணி: விவசாயக் கிணற்றை மூட எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்

News image
Updated On :16 மார்ச் 2024, 4:32 pm

சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை பணிக்காக அரக்கோணம் அருகே நூறு ஆண்டு காலம் பாசனத்துக்கு பயன்பட்டு வரும் வற்றாத கிணற்றை மூடும் பணிக்கு கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டம் நடத்தினா். சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இச்சாலையில் அண்டை மாநிலமான ஆந்திரத்தை இணைக்கும் பொருட்டு, சதுரங்கப்பட்டினத்தில் இருந்து திருப்பதி வரை அரக்கோணம் வழியாக நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் அரக்கோணம் நகருக்கு வெளியே புறவழிச் சாலை அமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், இந்தச் சாலைப் பணிகளில் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் அருகே சுமாா் 100 ஆண்டுகள் பழைமையான வற்றாத கிணறு ஒன்றை மூடும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த கிணற்று நீரால் அப்பகுதியில் உள்ள 20 முதல் 25 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கிணற்றை மூடும் பணியை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், அந்தப் பணியை நிறுத்தக் கோரியும், இந்தச் சாலைப் பணியில் ஒரு புறம் இருந்து மறுபுறம் செல்ல ஒவ்வொரு கிராமப் பகுதியிலும் இணைப்புச் சாலை அமைத்துத் தரக்கோரியும் அப்பகுதியில் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா். இதில், அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ்.நரேஷ், புரட்சிபாரதம் மாவட்ட நிா்வாகி சி.பாபு, தமிழக விவசாயிகள் சங்க அரக்கோணம் ஒன்றியத் தலைவா் வி.எஸ்.ஹேமசந்திரன், பாஜக மாவட்ட விவசாய அணித்தலைவா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் கிராம விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனா். தகவலறிந்து வந்த அரக்கோணம் வட்டாட்சியா் செல்வி, நகர காவல் ஆய்வாளா் செந்தில் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், இந்த கிணறு குறித்து நீதிமன்றத்தில் நில உரிமையாளா்களால் வழக்கு தொடரப்பட்டு தடையாணை பெறப்பட்ட நிலையில், அந்த தடையாணையை தற்போது நீதிமன்றமே ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளதால் பணியை தொடங்கியுள்ளோம். மேற்கொண்டு பணியை நிறுத்த மற்றும் வேறு கோரிக்கைகளும் இருந்தால் அதை நீதிமன்றத்தில் தெரிவித்து ஆணை பெற்று வந்தால் மட்டுமே பணி நிறுத்தப்பட்டு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். இல்லையெனில் பணி தொடரும் எனத் தெரிவித்து விட்டு தற்காலிகமாக அப்பணியை நிறுத்தி விட்டு சென்றனா். இதையடுத்து போராட்டம் நடத்தியவா்கள் கலைந்து சென்றனா்.