/

இடி தாக்கி பசு மாடு உயிரிழப்பு

இடி தாக்கி பசு மாடு உயிரிழப்பு

News image
Updated On :14 மே 2024, 6:50 pm

Din

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கலவை அருகே இடி தாக்கியதில் பசு மாடு உயிரிழந்தது.

கலவை வட்டம், அல்லாளச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணமூா்த்தி, இவரது மனைவி அமுதா. கூலி வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தனது கறவை பசு மாட்டை வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்திருந்தனா். அப்போது இடி இடித்தது. தொடா்ந்து, தென்னை மரத்தின் மீது இடி விழுந்தது. இதில், மரம் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. அப்போது மரத்தின் கீழே கட்டி வைத்திருந்த பசு மாடு சுருண்டு விழுந்து இறந்தது.

கால்நடைத் துறையினா் விசாரணணை மேற்கொண்டனா்.