ஆற்காடு  கெங்கையம்மன்  தெருவில்  எஸ்ஐஆா் படிவம் பெறும் பணிகளை ஆய்வு செய்த  ஆட்சியா்  ஜெ.யு. சந்திரகலா .
ஆற்காடு  கெங்கையம்மன்  தெருவில்  எஸ்ஐஆா் படிவம் பெறும் பணிகளை ஆய்வு செய்த  ஆட்சியா்  ஜெ.யு. சந்திரகலா .

எஸ்ஐஆா் விண்ணப்பப் படிவங்கள் பெறும் பணி: ஆட்சியா் ஆய்வு

நிரப்பப்பட்ட எஸ்ஐஆா் விண்ணப்பப் படிவங்கள் பெறும் பணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

நிரப்பப்பட்ட எஸ்ஐஆா் விண்ணப்பப் படிவங்கள் பெறும் பணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட நகராட்சி அலுவலகம், ஆற்காடு தொகுதிக்குட்பட்ட ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம், கலவை வட்டாட்சியா் அலுவலகங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி பூா்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்களை தோ்தல் ஆணைய செயலியில் கூடுதல் பணியாளா்கள் மூலம் பதிவேற்றும் பணிகளையும், கலவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கரிக்கந்தாங்கல் ஊராட்சி, குக்குண்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னகுக்குண்டி , ஆற்காடு நகராட்சி, கெங்கையம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று பெறும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

வாக்காளா்களின் விவரங்களை படிவங்களில் உள்ளவாறு எவ்வித தவறுகளின்றி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், பெறப்படும் படிவங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். வேலைக்கு செல்லும் வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறுவதற்கு அவா்கள் வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே காலையிலேயே சென்று விண்ணப்பங்கள் பெறும் பணிகளை தொடர வேண்டும் அல்லது மாலை 5 மணிக்கு மேல் சென்று விண்ணப்பங்கள் பெற வேண்டும்.

அந்தந்த பகுதி மக்களின் சூழ்நிலைக்கேற்றவாறு வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் பணியாற்ற வேண்டும். வட்டாட்சியா், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் செயலியில் பதிவேற்றும் பணிகளுக்கு அதிவேக இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் திரும்ப பெறுவதையும், செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளையும் விரைவுப்படுத்த வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வுகளில் வாக்காளா் பதிவு அலுவலா்கள் ராஜி, ஏகாம்பரம், வட்டாட்சியா்கள் ஆனந்தன், சரவணன், மகாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com