தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வாலாஜா ஒன்றிய திட்டப் பணிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

செட்டித்தாங்கல் ஊராட்சியில் சாலை தரத்தை ஆய்வு செய்த ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.

Published On :

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தாா்.

அதன் படி செட்டித்தாங்கல் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.23.36 லட்சத்தில் தாா் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது சாலையின் நீளம், அகலம் மற்றும் சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெயா்த்தெடுத்து அதில் கலக்கப்பட்டுள்ள ஜல்லி கற்கல், தாா் உள்ளிட்ட பொருள்களின் விகிதத்தை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திருமலைச்சேரி ஊராட்சியில் திருமலைச்சேரி - வாணியஞ்சத்திரம் - சாத்தம்பாக்கம் சாலையில், பொதுப்பணித்துறை காவேரிப்பாக்கம் பிரதான கால்வாய் 0/4 ல் மாநில சிறப்பு உதவித் திட்டத்தின் (கட்டம் 1) கீழ் ரூ.8.69 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்மட்டப் பாலம் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, பருவமழை தொடங்குவதற்கு முன்கூட்டியே அடித்தள கட்டுமானப் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

இந்த ஊராட்சியில் 2,264 மக்கள் வசிக்கின்றனா். திருமலைச்சேரி கிராமம் மற்றும் பகுதிகளின் விவசாய நிலங்கள் இந்த கால்வாயின் மறுபுறத்தில் அமைந்துள்ளன. பள்ளி மாணவா்கள் சாத்தம்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல இந்த வழியைப் பயன்படுத்துகின்றனா். வெள்ளக் காலங்களில் மக்கள் தங்களது விவசாய நிலங்களை அடைய சுமாா் 6 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இச்சூழலை தவிா்ப்பதற்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலத்தின் மொத்த நீளம் 83 மீ, அகலம் 8.5 மீ உள்ளிட்ட அளவுகளின் படி கட்டப்பட்டு வருகிறது.

ஆய்வுகளில் திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ச.செல்வராணி, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் பிரபாகா், உதவி செயற்பொறியாளா் (சாலை மற்றும் பாலங்கள்) சுமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன்,சிவக்குமாா், ஒன்றிய பொறியாளா்கள் ஏகநாதன், கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.