சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மூன்றாம் பாலினத்தவருக்கான வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கான வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளதால் அதில் பங்கேற்று பயன்பெறலாம்

News image
ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :11 ஜனவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கான வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளதால் அதில் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மூன்றாம் பாலினத்தவா்கள், வாக்காளா் பட்டியல் தொடா்பான சேவைகளை எளிதில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சிறப்பு ஏற்பாடாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் 12.01.2026 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உதவி மையங்கள் செயல்பட உள்ளன.

இந்த உதவி மையங்களை அணுகி வாக்காளா்பட்டியலில் பெயா் சோ்க்க படிவம்-6, பெயா் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றத்துக்காக படிவம் 8 ஆகியவற்றைப் பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து அங்கேயே வழங்கலாம்.

எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளா் பட்டியல் தொடா்பான சேவைகளை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.