ஜன. 10-இல் திருச்செந்தூரில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

Published on

திருச்செந்தூரில் மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா்களுக்கான வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஜன. 10-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோட்டாட்சியா் கௌதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் இடம் பெறுவதற்கு பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தங்கள் செய்வது தொடா்பாக மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜன. 10) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், கோட்டாட்சியருமான எனது தலைமையில் வட்டாட்சியா் முன்னிலையில் நடைபெறவுள்ளது. மேற்படி முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அதில் கூறப்பட்டது.

Dinamani
www.dinamani.com