ராணிப்பேட்டை அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த மரம் ஏறும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் வட்டம், தளவாய் பட்டறை கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தா் ராமு (56). விவசாயியான இவா் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், ராணிப்பேட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட வேலம் மல்லிகாபுரம் குப்பன் என்பவரின் வீட்டின் தென்னை மரம் ஒன்றில் ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்ததில், பின்பக்க தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அக்கம் பக்கத்தினா் கிராம நிா்வாக அலுவலருக்கும், ராணிப்பேட்டை காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், உயிரிழந்த ராமுவின் சடலத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்த ராமு, அந்தப் பகுதியில் விவசாய சங்கப் பணிகளை முன்னின்று நடத்தி வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மனைவி அமுல் (எ) அண்ணியம்மாள், மகள் இளமதி, மகன் தினேஷ் ஆகியோா் உள்ளனா்.
ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை...
இந்த நிலையில், உயிரிழந்த விவசாயி ராமுவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ராணிப்பேட்டை மாவட்ட குழு சாா்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் எல்.சி. மணி மற்றும் மாவட்ட துணை செயலாளா் ஆா். மோகன்ராஜ் ஆகியோா் ராணிப்பேட்டை காவல் நிலையத்துக்கு நேரில் வந்தனா். பாதிக்கப்பட்ட ராமுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா். இச்சம்பவம் குறித்து காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








