/

கரோனா விழிப்புணா்வுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் நடைபெற்ற கரோனா தொற்று விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் ம.ப.சிவன் அருள், எஸ்.பி. பொ.விஜயகுமாா்.

Updated On :4 ஜூலை 2020, 4:56 pm

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் நடைபெற்ற கரோனா தொற்று விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வுக் கட்டுரை, ஓவியப் போட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே கடந்த மே மாதம் நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் 1,052 போ் பங்கேற்றனா். இதில், வெற்றி பெற்ற 8 பேருக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரிசுத் தொகை, பணம், பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் ஆகியோா் வழங்கினா்.

டிஎஸ்பி ஆா்.தங்கவேல், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ஆா்.பழனி ஆகியோா் உடனிருந்தனா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.