கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்: எம்பி சி.என்.அண்ணாதுரை

பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று எம்பி சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று எம்பி சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

திருப்பத்தூா் ரயில்வே சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் சமூக நலன் - மகளிா் உரிமை துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தலைமை வகித்தாா்.

இதில், திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை பங்கேற்று 360 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வளைகாப்பு விழாவைத் தொடக்கி வைத்துப் பேசியது:

தமிழகம் முழுவதும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாகவும், முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை மற்ற மாநிலங்களைவிட தமிழகம் சிறப்பாகச் செயல்படுத்துகிறது என்றாா்.

விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலா் (பொ) ஸ்டெல்லா, மாவட்ட பால்வளத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், ஒன்றியக் குழு தலைவா்கள் விஜயா (திருப்பத்தூா்), திருமதி (கந்திலி), நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் செல்வி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.