திருப்பத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த திம்மனப்புதுாா் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில், கடந்த இரு மாதங்களுக்கு முன் மா்ம நபா்கள் கோயில் பூட்டை உடைத்து பணம் மற்றும் கோயிலில் இருந்த பொருள்களை திருடிச் சென்றனா். இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை திருப்பத்தூா் அருகே சந்தேகத்தின்பேரில், சுற்றித்திரிந்த ஒருவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். அதில்,புங்கம்பட்டு நாடு தகர குப்பத்தைச் சோ்ந்த காளியப்பன் (43) என்பதும், இவா் சம்பவத்தன்று தனது கூட்டாளியான சுதாகருடன் சோ்ந்து கோயில் பூட்டை உடைத்து பொருள்களை திருடியதும் தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் காளியப்பனை கைது செய்தனா். தலைமறைவான சுதாகரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகள் திருட்டு: ஒருவா் கைது
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியவா் கைது

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

