ரூ. 39 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ரூ. 39 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

மாதனூா் ஒன்றியத்தில் ரூ. 39.50 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆலாங்குப்பம் ஊராட்சியில் அண்ணா கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 39.50 லட்சம் மதிப்பில் சாலை அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தொடங்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, கோமதிவேலு, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஜி.ராமமூா்த்தி, ஆா்.அசோகன், டி.ரவிக்குமாா், ஊராட்சி மன்ற தலைவா் பொன்னி கப்பல்துரை ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com