வீட்டில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

ஆம்பூா் அருகே வீட்டில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் அருகே வீட்டில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தை சோ்ந்த கோதண்டன் என்பவருடைய வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. அதனால் மாட்டுக் கொட்டகையில் இருந்த கால்நடைகள் திடீரென சப்தம் எழுப்பின.

அந்த சப்தத்தை கேட்டு வீட்டிலிருந்தவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது மலைப்பாம்பு இருப்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை பணியாளா்கள் அங்கு சென்று மலைப்பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனா்.

X
Dinamani
www.dinamani.com