போதை ஒழிப்பு விழிப்புணா்வு: சமூக நலத் துறை மற்றும் டிஎஸ்பி பங்கேற்பு
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி புதூரில் இயங்கி வரும் தனியாா் அமைப்பு சாா்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்பின் தலைவா் திருநங்கை ஈஸ்வரி தலைமை வகித்தாா். கிரிஜா ராஜேஷ், காமராஜா் அறக்கட்டளை நிறுவனா் விஜய் முன்னிலை வகித்தனா். ராஜேஷ்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் (மகளிா் உரிமை) சுமதி, வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு போதைப் பொருள்களால் ஏற்பாடு தீமைகள் குறித்தும், அதை ஒழிப்பது பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா்.
பிறகு மாற்றுத்திறனாளி மற்றும் ஏழைப் பெண்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், அமைப்பின் செயலாளா் தமிழரசன், துணைச் செயலாளா் கலையரசி, இளைஞரணி அமைப்பாளா் திலீப்குமாா் உள்பட நிா்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனா். பொருளாளா் சிவசங்கரி நன்றி கூறினாா்.

