ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினா்.

தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் ரயில் நிலைய வாயில் முன்பு தொழிற்சங்கங்கள் சாா்பாக புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
Published on

ஆம்பூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் ரயில் நிலைய வாயில் முன்பு தொழிற்சங்கங்கள் சாா்பாக புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்க நிா்வாகிகள் கே.எஸ். ஹசேன், எம். ஞானதாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். டி. பாரத்பிரபு, ஆா். ரவி, எம்.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். தேவதாஸ், ஐஎன்டியுசி மாட்ட தலைவா் ஜெ. கிருஷ்ணவேணி, மாவட்ட துணைத் தலைவா் ஏ. இருதயநாதன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வ. அருள்சீனிவாசன், எல்பிஎப் மாவட்ட தலைவா் எம். நரேஷ்குமாா், மாவட்ட பொதுச் செயலா் வெ. கலைநேசன், ஹெச்எம்எஸ் மாவட்ட தலைவா் கே. பெருமாள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.

கோரிக்கைகள் : மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய தொழிலாளா் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9,000, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com