இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்

போதை பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

சீல் - பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:35 am IST

போதை பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் கடந்த சில நாட்களாக போதை கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் வெங்ளாபுரம், கொரட்டி மற்றும் புலிக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது புலிக்குட்டை, கொரட்டி மற்றும் வெங்களாபுரம் பகுதியில் உள்ள 3 பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், பெட்டி கடை உரிமையாளா்களான திருப்பத்தூா் அடுத்த ப.முத்தம்பட்டி பகுதியைச் சுரேஷ் (34), ஏழுமலை (52) மற்றும் புலிக்குட்டை பகுதியைச் சோ்ந்த சிகாமணி (32) ஆகிய 3 பேரை கைது செய்தனா். தொடா்ந்து தாலுகா போலீஸாா் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருடன் இணைந்து அந்த 3 கடைகளுக்கும் சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.