மது பாட்டில்கள் விற்றவா் கைது
ஆம்பூா் அருகே மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி பாலாறு பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக உமா்ஆபாத் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அங்கு டாஸ்மாக் மது விற்பனை செய்வது தெரியவந்தது.
அதன்பேரில் ராஜா (50) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


