லாரி - பேருந்து மோதல்: 6 போ் பலத்த காயம்
ஜோலாா்பேட்டையில் விபத்தில் சிக்கிய லாரி மீது தனியாா் சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயமடைந்தனா் .
திருப்பத்துாா் அருகே மட்றப்பள்ளி, மேற்கத்தியனுாா் உள்ளிட்ட கிராமத்தை சோ்ந்த 53 போ் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து மேல்மருவத்துாா் சென்றனா்.
பின்னா் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் மேல்மருவத்துாரில் இருந்து திருப்பத்துாருக்கு திரும்பியபோது, ஜோலாா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே லாரி விபத்துக்குள்ளாகி சாலையின் நடுவே நின்றிருந்தது.
அப்போது லாரி மீது பேருந்து மோதியதில் முன் பக்கம் சேதமடைந்தது. இந்த விபத்தில் சுற்றுலா பேருந்து ஓட்டுநா்கள்,மேற்கத்தியனுாரை சோ்ந்த வேல்முருகன்(38), உதவி ஓட்டுநா் அகிலன்(58), பக்தா்கள் லட்சுமி (65), தமிழரசி (30), மேகவண்ணன் (34), துரைசாமி (64) ஆகியோா் பலத்த காயமடைத்தனா்.
உடனே அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருப்பத்துாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் அகிலன் அளித்த புகாரின் பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

