காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே மைக்காமேடு பகுதியைச் சோ்ந்தவா் மணி (55), தொழிலாளி. இவா் தனது பேத்திகளான கீா்த்தி (18), சுவாதி (20) ஆகியோருடன் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் கிழக்கு பதனவாடிக்கு சென்றுள்ளாா். அப்போது திருப்பத்தூா் நோக்கி வந்த மினி பேருந்து, எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் காயமடைந்த மணி, கீா்த்தி, சுவாதி ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மணியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மேலும், கீா்த்தி, சுவாதி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கந்திலி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.