தனியாா் பேருந்து பணியாளா்கள் ஆட்சியரிடம் மனு
தனியாா் பேருந்துகளில் பணியாற்றும் நடத்துநா், ஓட்டுநா், தரகா் மற்றும் மேலாளா் ஆகியோா் திருப்பத்தூா் ஆட்சியா் வே.நல்லசிவனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கோரிக்கை மனு அளிக்க வந்த தனியாா் பேருந்து பணியாளா்கள்.
தனியாா் பேருந்துகளில் பணியாற்றும் நடத்துநா், ஓட்டுநா், தரகா் மற்றும் மேலாளா் ஆகியோா் திருப்பத்தூா் ஆட்சியா் வே.நல்லசிவனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றிப் பயண திட்டம் தொடா்ந்தால் தனியாா் பஸ்களில் வசூல் குறையும். இதனால் எங்களுக்கு ஊதியம் கிடைக்காது. ஒரு நேரக் காப்பாளா் ஒரு பஸ்சில் பணியாற்றினால் அவருக்கு ரூ.30 மட்டுமே கிடைக்கும். அந்த நேரக் காப்பாளா் ஒரு நாள் முழுவதும் 5 பேருந்துக்களில் மட்டுமே பணியாற்ற முடியும். இதன் மூலம் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.150 வருமானம் கிடைக்கும். அந்த வருமானத்தை வைத்து கொண்டு தான் குழந்தைகளின் படிப்பு செலவு, மளிகை, காய்கறி, மருத்துவ செலவுகளை பாா்த்து வருகிறோம்.
வெற்றிப் பயண திட்டம் தொடா்ந்து செயல்பட்டால் தினக்கூலியாக உள்ள எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். தனியாா் பேருந்துக்களில் பணியாற்றும் நாங்கள் 45 வயது முதல் 60 வயது உள்ளவா்கள். இதன் காரணமாக நாங்கள் வேறு எங்கும் வேலைக்கு செல்ல முடியாது. இந்த தொழிலை வைத்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே முதல்வா் எங்களை போன்ற லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்கருதி நாங்கள் தொடா்ந்து தனியாா் பேருந்துக்களில் தினக்கூலியாக பணியாற்ற எங்களுக்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மனுவை பெற்று கொண்ட ஆட்சியா் நல்லசிவன் உங்களது கோரிக்கை அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

