விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஏரி பாசனக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நாட்டறம்பள்ளி அருகே ஏரி பாசனக்கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் கு. ரவிகுமாா்.

Published On :8 செப்டம்பர் 2026, 3:25 am IST

நாட்டறம்பள்ளி அருகே ஏரி பாசனக்கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் கு. ரவிகுமாா் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மொத்தம் 430 மனுக்களைப் பெற்றாா். மனுக்களைப் பரிசீலித்து மேல்நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து 8 பேருக்கு ரூ.59,445 நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் முல்லை தலைமையிலான விவசாயிகள் அளித்த மனு: நாட்டறம்பள்ளி அருகே கூத்தாண்டகுப்பம் ஊராட்சி சாவடி வட்டத்தில் ஐயனேரி உள்ளது. இதில் உள்ள பிரதான மதகில் இருந்து தண்ணீா் செல்லக்கூடிய பாசன கால்வாயையும், மதகையும் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்து உள்ளாா். இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

ஜோலாா்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த மாணவிகளின் பெற்றோா் அளித்துள்ள மனு:, கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளியில் ஆண்டாய்வுக்கு வந்த அதிகாரி ஒருவா் வகுப்பறையில் இருந்த ஆசிரியையை வெளியே அனுப்பிவிட்டு, தலைமை ஆசிரியா் ஒவ்வொருவரிடமும் பணம் வசூலிப்பதாக தவறான தகவலை மாணவிகளிடம் கூறி, அந்த தகவலை புகாராக எழுதி தர வேண்டும் என மாணவிகளை மிரட்டி எழுதி வாங்கி உள்ளாா். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாணியம்பாடியை சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு: , வாணியம்பாடி உழவா் சந்தையில் வியாபாரம் செய்து வருகிறோம். அங்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் பொருள்களை இறக்கி வைக்க போதுமான இடவசதி இல்லை. வாகனங்களை நிறுத்தவும் போதுமான வசதி இல்லை. எனவே போதுமான இடவசதியை ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.