கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி: காவல் நண்பர்களுக்கு இலவசச் சீருடை அளிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவச சீருடை, அடையாள அட்டை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:20 am

DIN

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவச சீருடை, அடையாள அட்டை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி அல்-அமீன் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்டக் காவல் நண்பர்கள் குழுவின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.ரகுராமன், ஏ.கணேசன், கராத்தே மாஸ்டர் எம்.ஏ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பி.ஏ.முஹம்மத் சிராஜூதீன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் 120 பேரை காவல் நண்பர்கள் குழுவில் சேர்த்து, அவர்களுக்கு அடையாள அட்டை, இலவச சீருடைகளை வழங்கினார்.
மேலும், 120 பேரும் தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி, போக்குவரத்துப் பணி, இரவு ரோந்துப் பணி, தகவல் தொடர்புப் பணி ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார்.
விழாவில், காவல் நண்பர்கள் குழுவின் நிர்வாகி கே.மல்லிகார்ஜூன், பேராசிரியர்கள் சுந்தரேசன், ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.