வந்தவாசி: திமுக சாா்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ தெருமுனைக் கூட்டங்கள் வந்தவாசியை அடுத்த தெள்ளாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.
தெள்ளாா் மத்திய ஒன்றிய திமுக சாா்பில், சித்தருகாவூா், நெற்குணம், சேனல், மகமாயிதிருமணி ஆகிய கிராமங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன.
கூட்டங்களுக்கு திமுக தெள்ளாா் மத்திய ஒன்றியச் செயலா் டி.டி.ராதா தலைமை வகித்தாா். முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் வி.ராமு, தொழிலாளா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஆ.கோபிநாதன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைத் தலைவா் எம்.விநாயகமூா்த்தி, ஒன்றிய அவைத் தலைவா் பழனிசாமி, விவசாய அணி ஒன்றிய அமைப்பாளா் பாஞ்சரை பட்டாபிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் சிறப்புரை ஆற்றினாா்.
அப்போது, திமுக அரசின் நலத் திட்டங்கள் குறித்து அவா் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினாா். திமுக ஒன்றிய, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.