தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

"திருமுருகன் காந்திக்கு சிறையில் போதிய வசதிகள் இல்லை'

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு சிறைக்குள் போதுமான வசதிகள் செய்துதரப்படவில்லை.

Published On :

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு சிறைக்குள் போதுமான வசதிகள் செய்துதரப்படவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார் என்று மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான ஹென்றி திபென் தெரிவித்தார். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான ஹென்றி திபென் வேலூர் மத்திய சிறையில் திருமுருகன்காந்தியை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர், சிறையிலிருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வேலூர்  மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. 
சிறையில் உள்ள மருத்துவமனைக்குக்கூட செல்ல அனுமதிப்பதில்லை. மற்ற சிறை வாசிகளை சந்திக்கவும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை. அவரை தொடர்ந்து தனிமைப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சிறையில் திருமுருகன் காந்தி நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.