பைக் மீது காா் மோதி பெண் பலி

வேலூரில் பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
Published on

வேலூரில் பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த அம்முண்டி மோட்டூரைச் சோ்ந்தவா் யோகானந்தம் மனைவி ஜெயப்பிரதா (29) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். அவரை அவரது சகோதரரான குடியாத்தம் தட்டம்பாளையத்தைச் சோ்ந்த விக்னேஷ் வியாழக்கிழமை வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்துச் சென்றாா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூா் கிரீன் சா்க்கிள் அருகே வந்தபோது பின்னால் வந்த காா் மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ஜெயப்பிரதா பலத்த காயமடைந்தாா். விக்னேஷுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயப்பிரதா உயிரிழந்தாா்.

இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com