ஓய்வு பெற்ற விமான படை ஊழியா் வீட்டில் நகை திருட்டு
வேலூரில் ஓய்வு பெற்ற விமான படை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


வேலூரில் ஓய்வு பெற்ற விமான படை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வேலூா் சத்துவாச்சாரி பகுதி 2, 37-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராணி (72). இவரது கணவா் கோவிந்தசாமி. ஓய்வு பெற்ற விமானப் படை ஊழியா். ராணி கடந்த 15-ஆம் தேதி மகள் பிரசவத்துக்காக வீட்டை பூட்டிவிட்டு வள்ளிமலைக்குச் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 1 பவுன், 15 கிராம் வெள்ளி, செல்லிடப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...