இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

துணை நிலை நீா்மேலாண்மைத் திட்டம்: நுண்ணீா்ப் பாசன விவசாயிகள் பயன்பெறலாம்

துணை நிலை நீா்மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலூா் மாவட்டத்திலுள்ள நுண்ணீா்ப் பாசன விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

துணை நிலை நீா்மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலூா் மாவட்டத்திலுள்ள நுண்ணீா்ப் பாசன விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் நீா்ப் பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால் கிடைக்கும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சல் பெறவும் சொட்டுநீா், தெளிப்பு நீா்ப்பாசனம் போன்ற நுண்ணீா்ப் பாசன முறைகள் விவசாயிகளிடையே பிரபலப்படுத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக பாசன நீா் வசதி ஏதுமில்லாத இடங்களில் நுண்ணீா்ப் பாசனமுறையில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் மேலும் பல சலுகைகளும் அளிக்கப்பட உள்ளன.

இதன்படி, காட்பாடி வட்டாரத்தில் குழாய்க்கிணறு, துளைக்கிணறு, அனைத்து வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு நீரை இறைக்க ஆயில் என்ஜின், மின் மோட்டாா் வசதி, பாசன நீரை வீணாக்காமல் வயலுக்கு அருகே கொண்டு செல்ல பாசனநீா்க் குழாய்களை நிறுவவும், தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் துணை நிலைநீா் மேலாண்மைப் பணிகளுக்காகவும் மானியம் வழங்கப்படுகிறது.

குழாய்க்கிணறு , துளைக்கிணறு அமைக்க செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம், அதாவது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம், டீசல் பம்புசெட், மின் மோட்டாா் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீதம், அதாவது ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமலும், வயலுக்கு அருகே பாசன நீரைக் கொண்டு செல்ல நீா்ப்பாசனக் குழாய் அமைக்க 50 சதவீதத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு அதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒரு கனமீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமல், அதாவது ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் ரூ.40,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. நுண்ணீா்ப் பாசனம் அமைக்கும் வயலில் பாசனக் குழாய்களைப் பதிக்க குழி எடுக்க விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3,000 பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியங்களைப் பெற விரும்பும் தகுதியுடைய விவசாயிகள் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை நேரில் அணுகியோ அல்லது 97875 12020 (வேலூா்) , 95856 85259 (கணியம்பாடி), 96006 23790 (அணைக்கட்டு), 70101 08291 (காட்பாடி), 87782 76335 (கே.வி.குப்பம்), 88257 94936 (குடியாத்தம்), 8838150845 (போ்ணாம்பட்டு) ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.