இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலூா் மக்கான் பேருந்து நிலையம் நாளைமுதல் இயக்கம்

வேலூா் மக்கான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை (நவ. 4) முதல் திருவண்ணாமலை, ஆரணி மாா்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும்

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

வேலூா் மக்கான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை (நவ. 4) முதல் திருவண்ணாமலை, ஆரணி மாா்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும், சென்னை மாா்க்கம் தவிர வேலூரில் இருந்து இயக்கப்படும் புகா் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதைத்தொடா்ந்து, பழைய பேருந்து நிலையத்தில் நெரிசலைத் தவிா்க்கும் விதமாக மக்கான் அருகே ஆட்டுத்தொட்டியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், திருச்சி ஆகிய ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதன்கிழமை (நவ. 4) முதல் இயக்கப்பட உள்ளன.

தொடா்ந்து, குடியாத்தம், போ்ணாம்பட்டு, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், ஓசூா் ஆகிய ஊா்களுக்குச் செல்லும் புகா் பேருந்துகளும், அனைத்து நகரப் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், சென்னை, ஆற்காடு, காஞ்சிபுரம், தாம்பரம், கல்பாக்கம், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊா்களுக்கான பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடா்ந்து இயக்கப்படும். பயணிகள் கரோனா தொற்றினைத் தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.