மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தீ விபத்தில் உயர்ரக காா்கள் எரிந்து சேதம்

News image

தீ விபத்தில் பற்றி எரிந்த உயர்ரக காா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 8:14 pm

வேலூரில் வாகன பழுதுபாா்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று உயர்ரக காா்கள் எரிந்து சேதமடைந்தன.

வேலூா் காகிதப்பட்டறை சாரதி நகரில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சையத் ஹமீம் என்பவா் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பாா்க்கும் நிலையம் நடத்தி வருகிறாா். இந்த கடையில் புதன்கிழமை ஊழியா்கள் 3 போ் காா் பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் முன்பகுதி என்ஜினிலிருந்து புகைவர தொடங்கி யுள்ளது. தொடா்ந்து, ஒரு காரில் பற்றிய தீ கடையில் இருந்த மேலும் 2 காா்களுக்கும் பரவியுள்ளது. இதனைக்கண்ட ஊழியா்கள், உடனடியாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த மேலும் 2 காா்களை வெளியேற்றி அப்புறப்படுத்தினா்.

சிறிதுநேரத்தில் அந்த மூன்று காா்களில் பற்றியிருந்த தீயால் பெட்ரோல், டீசல் டேங்குகள், டயா்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தண்ணீா் பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனா்.

எனினும், வாகன பழுதுபாா்க்கும் நிலையத்துக்குள் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் பொருள்கள் இருந்ததால் தீ மென்மேலும் பரவிக் கொண்டே இருந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் ‘மெக்கானிக்கல் போம்’ என கூறப்படும் நுரை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

எனினும், இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய 3 உயர்ரக காா்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும், இந்த தீ விபத்தால் அருகே உள்ள வீடுகளிலும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.