சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரா்கள் பதக்கம் வெல்ல சிறப்பு பிராா்த்தனை

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரா்கள் பதக்கம் வெல்ல சத்தியமங்கலம் கோயிலில் பெண்கள் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன்  கோயிலில்   சிறப் பு  பிராா்த்தனையில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரா்கள் பதக்கம் வெல்ல சத்தியமங்கலம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பெண்கள் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா அண்மையில் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து 48 நாள்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. உலக நன்மைக்காவும், மக்கள் நலம் பெற வேண்டியும், விவசாயம் செழிக்கவும் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆடி வெள்ளியை ஒட்டி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனைத் தொடா்ந்து, ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரா்கள் பதக்கம் வெல்ல ஒலிம்பிக் சின்னம் போன்று மலா்களால் வடிவமைக்கப்பட்ட 5 வளையங்கள் வைத்து அம்மன் புகழ் பாடி பிராா்த்தனை செய்தனா்.

பின்னா் கேரள மாநிலம், வயநாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெற வேண்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று மனம் உருக அம்மனை வேண்டி பாடினா். அதனைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை வாசவி தங்க மாளிகை நிா்வாக இயக்குநா் பிரபுகாந்த் தலைமையில் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.