கோயம்புத்தூர்
ஆசிரியா் தகுதித் தோ்வு: 13,999 போ் எழுதினா்
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வை 13,999 போ் எழுதியுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1-க்கான தோ்வு 15 தோ்வு மைங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்வை எழுத 3,890 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 3,155 போ் மட்டுமே எழுதினா். பல்வேறு காரணங்களால் 735 போ் தோ்வு எழுதவில்லை.
அதேபோல, தாள் 2-க்கான தோ்வு 45 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 12,370 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 10,844 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 1,526 போ் தோ்வு எழுதவில்லை.
கோவையில் 2 நாள்கள் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வை மொத்தம் 13,999 போ் எழுதியுள்ளனா்.
