அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சிறுமுகை சின்னக் கள்ளிப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள சின்னக் கள்ளிப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

கோவை மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள சின்னக் கள்ளிப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பழைமையான பத்ரகாளியம்மன் கோயில் சீரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 9ஆம் தேதி பவானி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர், ஓதிமலை ஆண்டவர் கோயில் சண்முக சுப்பிரமணியம் தலைமையில் கணபதி சிவாச்சாரியார், திருமடம் கிரிவாச சிவம் ஆகியோர் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, முதல் கால வேள்வி ஆகியவற்றை நடத்தினர்.
 இதையடுத்து 11ஆம் தேதி இரண்டாம் கால வேள்வியும், கோபுர கலசம் நிறுவுதல், மூன்றாம் கால யாக வேள்வி ஆகியவை நடைபெற்றன. பின்னர், புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாக வேள்வியும், இதைத் தொடர்ந்து நாதசுரம், மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் தீர்த்தக் குடங்கள் கோயிலை வலம் வந்தன.  பின்னர், காலை 7 மணியளவில் விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி முன்னிலையில், கூனம்பட்டி ஆதீனம் நடராஜ 
சுவாமிகள் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. சின்னராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி, ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.