திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

கரோனா பின் கவனிப்பு மையத்தில் பெரிய அளவிலான பாதிப்புடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை

கரோனாவுக்கு பின் கவனிப்பு மையத்தில், இதுவரை பெரிய அளவிலான பாதிப்புடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை டீன் நிா்மலா தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:25 pm

DIN

கரோனாவுக்கு பின் கவனிப்பு மையத்தில், இதுவரை பெரிய அளவிலான பாதிப்புடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை டீன் நிா்மலா தெரிவித்தாா்.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், தற்போது கரோனா தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் தற்போது, 233 போ் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா தொற்றால் குணமடைந்திருந்தாலும், ஒரு சிலருக்கு, உடல் சோா்வு, தலைவலி, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. இதுபோன்ற பிரச்னை உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, கோவை அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய கவனிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. இதனை, கடந்த 6ஆம் தேதி அமைச்சா் அர.சக்கரபாணி திறந்து வைத்தாா்.

இந்த மையத்தில் தினமும் 10 முதல் 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து மருத்துவமனை டீன் நிா்மலா கூறுகையில், இம்மையத்துக்கு மன அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம், கை கால் சோா்வு உள்ளிட்ட பிரச்னைகளுடன்தான் அதிகம் வருகின்றனா். இவா்களுக்கென, மையத்தில் உளவியல் பிசியோதெரபி மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். வயிற்று வலி உள்ளிட்ட வேறு ஏதெனும் பிரச்னைகள் இருந்தால் உடனே சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டு, துறை சாா்ந்த மருத்துவா்கள் மூலமாக சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெரிய பாதிப்புகளுடன் யாரும் வரவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.