திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

எஸ்டிபிஐ கட்சி ஆா்ப்பாட்டம்

சமூக செயல்பாட்டாளா்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:23 pm

DIN

சமூக செயல்பாட்டாளா்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜா உசேன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் முகமது இசாக், மாநில வா்த்தக அணி செயலாளா் அப்துல்கரீம், பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டச் செயலாளா் முஜிபுர்ரஹ்மான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன் சுவாமி மகாராஷ்டிரா சிறையில் உரிய சிகிச்சைகள் இன்றி அவதிப்பட்டு உயிரிழந்துள்ளாா். சமூக ஆா்வலா்கள் மீது இதுபோல மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் தொடா் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.