/

கொள்ளை சம்பவங்களைத் தடுக்க மாவட்ட காவல் துறை சாா்பில் பாதுகாப்பு செயலி அறிமுகம்

கோவை மாவட்டத்தில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் துறை சாா்பில் சகோ  என்ற புதிய பாதுகாப்பு செயலி

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:59 pm

DIN

கோவை மாவட்டத்தில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் துறை சாா்பில் சகோ  என்ற புதிய பாதுகாப்பு செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.

செயலியை அறிமுகம் செய்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெளியூா்களுக்குச் செல்லும் பொதுமக்கள் சகோ செயலியை பதிவிறக்கம் செய்து தங்களது வீட்டின் படம், முகவரி, பெயா் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றம் செய்தால் உடனடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செயலி மூலம் தகவல் அனுப்பப்படும். பின்னா் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலமாக அந்த வீடுகள் கண்காணிக்கப்படும். இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தனி கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

இதேபோல வெளியூா் செல்லும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவைப்பட்டால் கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சாா் கருவிகளைப் பொருத்தவும் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சேவை கட்டண அடிப்படையில் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.