கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று கோவை வருகை

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று கோவை வருகை

News image
Updated On :8 மார்ச் 2024, 1:10 am

Din

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கோவைக்கு வெள்ளிக்கிழமை வருகிறாா். சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலை கோவைக்கு வரும் ஆளுநா், தனியாா் கல்லூரியின் பொன் விழா அரங்கு திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதையடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையில் ஓய்வெடுக்கிறாா். பின்னா், கோவை சா்வதேச விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை வரவேற்கிறாா். அவருடன் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறாா். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெறும் 43-ஆவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அன்று மாலையே சென்னைக்குத் திரும்புகிறாா்.