புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மீலாது நபி: வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவிகள்

கோவை பழைய மாா்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் மீலாது நபியையொட்டி, நலிவுற்ற மக்களுக்கு ரூ.12.50 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மீலாது நபியையொட்டி, நலிவுற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கிய மெளலானா முஹம்மது அலி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் நூா் முஹம்மது. உடன் சங்க நிா்வாகிகள்.

Published On :

கோவை பழைய மாா்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் மீலாது நபியையொட்டி, நலிவுற்ற மக்களுக்கு ரூ.12.50 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை உக்கடம் மௌலானா முஹம்மது அலி மாா்க்கெட் எனப்படும் பழைய மாா்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் 83-ஆவது ஆண்டு மீலாது நபி விழாவையொட்டி, சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாா்க்கெட் தலைவா் நூா் முஹம்மது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலிவுற்ற குடும்பத்தினா்களுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 50 தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், காது கேட்கும் கருவி மற்றும் இஸ்திரி பெட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், ஏழை குடும்பங்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன. நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு பிராா்த்தனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முகமது ரஃபி, சுல்தான், 86-வது வாா்டு மாமன்ற உறுப்பினா் அகமது கபீா், எஸ்டிபிஐ மாநிலப் பொருளாளா் முஸ்தபா உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் வியாபாரிகள் என 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.