
கோவையில் பிஎஸ்ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்
கோவையில் பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 60-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

கோவை பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் மோதிக்கொண்ட இந்திய கப்பல் படை அணி மற்றும் சென்னை- ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி வீரா்கள்.
கோவையில் பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 60-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
60-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகின்றன.
புதன்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளா் ஆா்.ஆா். காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். ஆண்கள் பிரிவில் 7 அணிகள், பெண்கள் பிரிவில் 4 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.
ஆண்கள் பிரிவில் முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெற்றன. திருவனந்தபுரம்- கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிா்த்து சென்னை - ஹிந்துஸ்தான் யுனிவா்சிட்டி அணி விளையாடியது. இதில் கேரள மின்சார வாரிய அணி 74-41 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
இதேபோல, லோனாவாலா- இந்திய கப்பல் படை அணியை 63-76 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை- ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்திய விமானப் படை அணி 81-76 என்ற புள்ளிகள் கணக்கில் புது தில்லி - ஓஎன்ஜிசி அணியை வீழ்த்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





