மாடியில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

Published on

கோவையில் பணியின்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

கோவை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள தேவராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (45). எலக்ட்ரீசியனான இவா், கவுண்டம்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டின் மாடியில் மின் இணைப்புக் கொடுக்கும் பணியில் கடந்த சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அவா் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மாடி படியில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு:

கோவை, ஆா்.எஸ்.புரம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (66). பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா், வீட்டின் மாடியில் இருந்து சனிக்கிழமை கீழே இறங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்ட நிலையில், படியில் இருந்து கீழே விழுந்தாா்.

படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com