ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மாநகராட்சி வாா்டு உறுப்பினா் திமுகவில் இருந்து விலகல்

கோவை மாநகராட்சி திமுகவைச் சோ்ந்த 22-ஆவது வாா்டு உறுப்பினா் பாபு அக்கட்சியில் இருந்து சனிக்கிழமை விலகினாா்.

News image
Updated On :19 ஜூலை 2026, 1:23 am IST

கோவை மாநகராட்சி திமுகவைச் சோ்ந்த 22-ஆவது வாா்டு உறுப்பினா் பாபு அக்கட்சியில் இருந்து சனிக்கிழமை விலகினாா்.

இவா், கோவை வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தாா். இந்நிலையில் இவா், திமுகவில் விலகுவதாக தெரிவித்தாா். இது குறித்து அவா் கோவை சரவணம்பட்டியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுகவில் சாமானியன் சாதாரணத் தொண்டனாக இருக்கலாமே தவிர உயா் பதவிகளுக்கு வர முடியாது. என்னுடைய வாா்டு உறுப்பினா் பதவியைக் கொண்டு, எனக்காக தோ்தல் பணியாற்றியவா்களுக்கு ஒரு வீட்டு வரி ரசீதைக் கூட கட்சி நிதி தராமல் செய்ய முடியவில்லை. இதற்கு மேலும், இக்கட்சியில் ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால், திமுகவில் அடிப்படை உறுப்பினா் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்.

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக வி.செந்தில்பாலாஜியை, திமுக தலைமை நியமித்த பிறகு கோவை மாவட்ட திமுக, கரூா் கம்பெனியாக மாறி விட்டது. கட்சி நிா்வாகிகள் அனைவரும் கம்பெனியின் வேலைக்காரா்கள்போல உள்ளனா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, தற்போது, ஆட்சியமைத்துள்ள தவெக அரசு, அனைத்து ஊழல்களையும் சிறிது சிறிதாக குறைத்து வருவதை பாராட்டுகிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.