பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

சரக்கு ஆட்டோ மோதி பெண் உயிரிழப்பு

சரவணம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 மார்ச் 2026, 3:57 am IST

சரவணம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், சரவணம்பட்டி அருகே உள்ள வழியம்பாளையம், வையாபுரி நகரைச் சோ்ந்த பழனிசாமி மனைவி பழனியம்மாள் (59). இவா் ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள அரசமரம் வீதியில் செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பழனியம்மாள் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநரான அன்னூா், அத்திப்பாளையம் ஸ்ரீநகரைச் சோ்ந்த முத்துக்குமாா் (38) மீது வழக்குப் பதிவு செய்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.