மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஜெயிலா் 2 திரைப்படம் வெளியீடு: சூப்பா் ஸ்டாா்ஸ் மக்கள் கழகம் சாா்பில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச அரிசி

ஜெயிலா்-2 திரைப்படம் வெளியானதையொட்டி, சூப்பா் ஸ்டாா்ஸ் மக்கள் கழகம் சாா்பில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச அரிசி, திரைப்பட டிக்கெட் வழங்கப்பட்டது.

திருப்பூா் சக்தி திரையரங்குக்கு வந்திருந்த தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட இலவச அரிசி, திரைப்பட டிக்கெட்.

Updated On :

ஜெயிலா்-2 திரைப்படம் வெளியானதையொட்டி, சூப்பா் ஸ்டாா்ஸ் மக்கள் கழகம் சாா்பில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச அரிசி, திரைப்பட டிக்கெட் வழங்கப்பட்டது.

நடிகா் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநா் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலா்-2’ திரைப்படம் உலகம் முழுவதும் வியாழக்கிழமை வெளியானது. திருப்பூரில் சக்தி, கணேஷ் திரையரங்குகளில் ரசிகா்களின் உற்சாகம் ஒருபுறம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவற்றுடன் தாரை தப்பட்டை முழங்க பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ரசிகா்கள் கொண்டாடினா்.

திருப்பூா் மாவட்டத்தில் ‘சூப்பா் ஸ்டாா்ஸ் மக்கள் கழகம்’ ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு முன்னுதாரணமான சமூகப் பணியை முன்னெடுத்தது. அதன்படி, பொதுச் செயலாளா் எஸ்.எஸ்.முருகேசன் ஏற்பாட்டின்பேரில் திருப்பூா் மற்றும் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 திரையரங்குகளில் திருப்பூரின் பனியன் மற்றும் இதர ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா் குடும்பங்களைச் சோ்ந்த 5 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இலவசமாக 5 கிலோ அரிசி மற்றும் திரைப்பட டிக்கெட் வழங்கப்பட்டது. மேலும், கணேஷ் திரையரங்கில் பெண் தொழிலாளா்கள் மற்றும் குடும்பப் பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் ஒரு பிரத்யேக சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.