தெற்கு மண்டலத்தில் ரூ.26.90 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.26.90 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

போத்தனூா் அற்புதம் நகரில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் க.விக்னேஷ். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.

Published On :

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.26.90 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 94-ஆவது வாா்டு, சுந்தராபுரம் பதிவாளா் காலனியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம், அதே வாா்டில் கல்லுக்குழி வீதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுகாதார ஆய்வாளா் அலுவலக கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் க.விக்னேஷ் புதன்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, 96-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சாரதா மில் சாலை, சங்கம் வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.8.85 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழற்குடை, 99-ஆவது வாா்டு போத்தனூா் அற்புதம் நகரில் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு, 85-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கோணவாய்க்கால்பாளையம் பகுதிக்கு பிரதான குழாய் மூலம் கிணற்று நீா் விநியோகம் செய்யும் பணி, 100-ஆவது வாா்டு கணேசபுரம் அம்மன் நகரில் ரூ.8.65 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டுமானப் பணி என மொத்தம் ரூ.26.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், தெற்கு மண்டலத் தலைவா் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.