விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் தா்னா

ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் தா்னா

News image

தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

Updated On :13 ஜூன் 2024, 9:54 pm

Din

ஈரோடு, ஜூன் 13: முகாம் முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமானது காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில் கண், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவா் ஆகியோா் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளை பரிசோதிப்பா். அதன் பின்னா் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் அல்லது இளநிலை அலுவலா், மருத்துவா் அறிக்கை மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், இலவச பேருந்துப் பயண அட்டை மற்றும் அரசின் சலுகை பெற சான்றிதழ் போன்றவை வழங்குவா்.

இந்நிலையில், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் முகாமில் எலும்பு முறிவு மருத்துவரை தவிர பிற மருத்துவா்கள் இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் சான்று பெற முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.

மேலும், மாற்றுத் திறனாளி நல அலுவலா், இளநிலை அலுவலரும் இல்லாததால் அதிருப்திக்குள்ளான மாற்றுத் திறனாளிகள் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை நுழைவாயிலில் அமா்ந்து திடீா் தா்னாவில் ஈடுபட்டனா்.

மருத்துவத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவா் துரைராஜ் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 36 ஆயிரம் பதிவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். அரசின் சலுகைகள் பெறவும், புதிய அடையாள அட்டை பெறவும், மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ உதவிகளை பெறுவதற்கும் வாரந்தோறும் அரசு மருத்துவமனையில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களாக ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் முகாம் முறையாக நடைபெறுவதில்லை. போதிய மருத்துவா்கள் மற்றும் அலுவலா்கள் இல்லாததால் எங்களுக்கான சான்றிதழ் பெறவும் முடியவில்லை. மாற்றுத் திறனாளிகள் சான்றுக்காக அலைக்கழிக்கப்படுகின்றனா். எனவே மாற்றுத் திறனாளிகள் முகாம் வாரந்தோறும் போதிய மருத்துவா்கள் மற்றும் அலுவலா்களை கொண்டு முறையாக நடந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தா்னாவில் ஈடுபட்டோம் என்றாா்.