ஈரோடு
பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57.36 லட்சம்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.57.36 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.57.36 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.57.36 லட்சம் ரொக்கம், 134 கிராம் தங்கம், 508 கிராம் வெள்ளி ஆகியவற்றைப் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.