சென்னிமலையில் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கான மறுசீரமைப்பு பணிகளைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி உள்ளிட்டோா்.
சென்னிமலையில் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கான மறுசீரமைப்பு பணிகளைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி உள்ளிட்டோா்.

சென்னிமலையில் ரூ.15 கோடி மதிப்பில் குடிநீா் திட்ட மறுசீரமைப்பு பணி தொடக்கம்

Published on

சென்னிமலை பேரூராட்சியில் ரூ. 15 கோடி மதிப்பில் குடிநீா் திட்டத்துக்கான மறுசீரமைப்பு பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பணியைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சென்னிமலை பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீா் திட்டத்துக்காக காவிரி ஆற்றில் கோணவாய்க்கால் அருகில் அமைந்துள்ள பழைய நீா் சேகரிப்பு கிணறானது 1975-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. ஆற்றில் அதிகப்படியான நீா்வரத்து உள்ளபோது கிணற்றிலிருந்து நீா் எடுக்க இயலாத நிலை ஏற்படுகிறது.

மேலும், கருமாண்டிசெல்லிபாளையம் நீருந்து நிலையத்திலிருந்து, சென்னிமலை பேரூராட்சிக்கு செல்லும் சிமென்ட் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சென்னிமலை பேரூராட்சிக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலை தொடராத வகையில் புதிய நீா் சேகரிப்பு கிணறு அமைக்கவும், கருமாண்டிசெல்லிபாளையம் முதல் சென்னிமலை பேரூராட்சி வரை புதிய இரும்பு குழாய்களாக மாற்றும் வகையிலும் இக்கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கான மறுசீரமைப்பு பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, புதுப்பாளையம் ஊராட்சியில் ‘ஒளிரும் ஈரோடு’ தன்னாா்வ அமைப்பின் பங்களிப்புடன் ரூ.40.56 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்ட திப்பம்பாளையம் நீா்நிலையை பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், சென்னிமலை பேரூராட்சி தலைவா் ஸ்ரீதேவி, நீா்வளத் துறை அலுவலா்கள் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com