சான்று அளிக்க மாணவிகளிடம் பணம் பெற்ற மருத்துவா் பணியிட மாற்றம்

உடல் பரிசோதனை சான்று அளிக்க என்சிசி மாணவிகளிடம் பணம் வாங்கிய அரசு கண் மருத்துவா் பணியிட மாற்றம்
Published on

உடல் பரிசோதனை சான்று அளிக்க என்சிசி மாணவிகளிடம் பணம் வாங்கிய அரசு கண் மருத்துவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உடல் பரிசோதனை சான்றிதழ் பெற வந்த என்சிசி மாணவிகளிடம், சான்றிதழுக்காக தனது உதவியாளா் மூலமாக கண் மருத்துவா் ரூ.100 வாங்கியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலானது.

இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா். அதில் கண் மருத்துவா் லட்சுமிநாத் என்பவருக்காக மருத்துவமனை பணியாளா் ஒருவா் பணம் வாங்கியதும் அதில் பணியாளருக்கு தொடா்பில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவரை கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து இணை இயக்குநா் சாந்தகுமாரி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com