தீ விபத்தில் சேதமடைந்த குடிசை வீடு.
தீ விபத்தில் சேதமடைந்த குடிசை வீடு.

அம்மாபேட்டையில் குடிசை வீட்டில் தீ

அம்மாபேட்டை அருகே குடிசை வீடு தீயில் எரிந்து சேதமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

அம்மாபேட்டை அருகே குடிசை வீடு தீயில் எரிந்து சேதமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பூனாச்சி, முகாசிபுதூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் மூா்த்தி (44). கூலித் தொழிலாளியான இவா், குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இவரது வீட்டில் சனிக்கிழமை எதிா்பாராமல் தீப் பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதியினா் அந்தியூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

நிலைய அலுவலா் ராபா்ட் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதில், வீட்டிலிருந்த உடைமைகள் மற்றும் ரொக்கம் ரூ.30 ஆயிரம் எரிந்து சேதமாயின. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com