கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய் வழங்கக் கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்று, ஈரோடு மாவட்ட நுகா்வோா் மையச் செயலாளா் பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ரேஷன் கடை - கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்று, ஈரோடு மாவட்ட நுகா்வோா் மையச் செயலாளா் பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் இறக்குமதி செய்யப்படுவதால் அந்நியச் செலாவணி வெளியேறுகிறது. அதற்கு பதிலாக உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் சமையல் எண்ணெய்யை வழங்கினால் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதுடன், அந்நியச் செலாவணி செலவையும் கட்டுப்படுத்த முடியும்.

பாமாயில் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கொழுப்புச் சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்து விவரங்கள் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு உட்கொள்வது உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அனுப்பப்படும் சில வேளாண் விளைபொருள்களில் பூச்சிக்கொல்லி மருந்து எச்சங்கள் இருப்பதாகக் கூறி அவை நிராகரிக்கப்படும் சம்பவங்களும் உள்ளன. எனவே உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வேளாண் விளைபொருள்களை முறையாக பரிசோதித்து அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் நன்றாக உள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதம்தோறும் குறைந்தது 5 கிலோ கோதுமை வழங்க வேண்டும். ரேஷன் அரிசியை பெரும்பாலான மக்கள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கான தீவனமாகப் பயன்படுத்துகின்றனா் என்று வருவாய்த் துறை அமைச்சா் கூறியிருப்பது சரியல்ல. பலா் ரேஷன் அரிசியை இட்லி, தோசை தயாரிக்கப் பயன்படுத்துகின்றனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.