விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஈரோட்டில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 2 ஆவது நாளாக மறியல்

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 2- ஆவது நாளாக புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்டு முழக்கம் எழுப்பிய சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:20 pm

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 2- ஆவது நாளாக புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா்.

அதன்படி ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 2 ஆவது நாளாக புதன்கிழமை திரண்ட சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தனுஷ்கோடி தலைமை வகித்தாா். செயலாளா் பழனிசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

வணிக வரித் துறை அலுவலா் சங்க துணை பொதுச்செயலாளா் சாமிகுணம் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலச் செயலாளா் உஷாராணி வாழ்த்திப் பேசினாா்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுத் துறைகளில் பணி மூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு ரூ. 6,750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கவேண்டும். பெண் சத்துணவு ஊழியா்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 15 ஆண்கள், 610 பெண்கள் என 625 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபங்களில் அடைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.